புதன், 23 ஆகஸ்ட், 2017

உலகத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா, சிறப்புரை விவரங்கள்



ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017

சுல்தான் இத்திரிசு கல்வியியல் 


பல்கலைக்கழகம், பேரக்கு,

 மலேசியா


உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்க் கணிமச் சொல்லாய்வு எனும் தலைப்பில் அகர முதல மின்னிதழின் தோற்றுநர் தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் சிறப்புரை ஒன்றனை வழங்கவுள்ளார். அனைவரும் கலந்து பங்குபெறுங்கள்.




பதிவு www.wtic.my
இது நமக்கான தளம்,தமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம். பங்குபெறுவோம்!! பயனடைவோம்!!


தனேசு பாலகிருட்டிணன் / Thanesh Balakrishan : 014 327 9982
சனார்த்தனன் வேலாயுதம்  /Janarthanan Velliathum : 0109009230
 செயமோகன் பாலச்சந்திரன் / Jayammohan Balachandaram : 0164525159

 வரதராசன் சுப்பிரமணியம் / Varatharasan Subramaniam : 0165100444










திங்கள், 21 ஆகஸ்ட், 2017

மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் ஆற்ற முடியும் – கவிஞர் மு.முருகேசு




வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல்,

மாணவர்கள் மனம் வைத்தால், எதையும்  ஆற்ற முடியும்

                        – கவிஞர் மு.முருகேசு-
     வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கில், வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல் மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் அவர்களால்  ஆற்ற – சாதிக்க- முடியும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார்.
     வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான
சிறப்பு உரையரங்க நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் மொழிப்போர் ஈகையர் அ.மு.உசேன் தலைமையேற்றார்.
பள்ளியின் தலைமையாசிரியர் பெ. வேதபிரகாசு முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்  செ.திவாகர் அனைவரையும் வரவேற்றார்.
     ‘மாணவர்கள் எனும் மகா சக்தி’ எனும் தலைப்பில்  பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு
தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வந்தவாசி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு  பேசினார். அப்போது, அவர்,
       “நாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருக்கின்றோம்; நமது பெற்றோர்கள் படிக்காதவர்கள்;  எளிமையான அரசுப்பள்ளியில் படிக்கின்றோம் என்று நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம்.
மாணவர்களாகிய உங்களுக்குள் மகத்தான ஆற்றல் பொதிந்து கிடக்கிறது.  உங்களுக்குள்
இருக்கும்  ஆற்றலை நீங்கள் உணர்ந்துகொண்டால், உங்களால் எதையும் ஆற்ற முடியும்.
     இந்தியத் திருநாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலவர் பதவியை அலங்கரித்த பெருமகனார் ஆ.ப. செ.அப்துல் கலாம், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். தன்னாலும் அருவினை ஆற்ற முடியும் என்று பள்ளி மாணவனாக இருந்த போதே, மனத்தில் உறுதிபூண்டார். அறிவியலாளராகத் தன்னை வளர்த்துக் கொண்டார். பொது வாழ்வில் ஒரு மனிதன் எவ்வளவு நேர்மையோடும் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும் என்பதற்கான  எடுத்துக்காட்டாக உத்தமத் தலைவராக வாழ்ந்தார்.
   இதுவரை இருந்த இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே அப்துல் கலாம் அவர்கள் தான், அதிகமான பள்ளி மாணவ – மாணவிகளைச் சந்தித்துப் பேசியவர். குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் அனைவரையும் அன்புடன் அழைத்து  விருந்தோம்பியவர். இந்தியாவெங்குமுள்ள பல  நூறாயிரம் மாண-மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டிய கலாம் வழியில் நாமும் சிந்தித்தால், நம்மாலும் சாதிக்க முடியும்.   
  தேர்வுக்காக மட்டுமே படிக்காமல், எதையும் புரிந்து படியுங்கள். பாடப் புத்தகங்களோடு மட்டும் உங்களின் புத்தக வாசிப்பு சுருங்கி விடக்கூடாது. சமூகம், கலை – இலக்கியம், அறிவியல், விளையாட்டு சார்ந்த பலவகைப்பட்ட  நூல்களையும் படியுங்கள். படிப்படியாக வாழ்வில் முன்னேறியவர்கள், புத்தகங்களைப் படித்துத் தான் உயரங்களைத் தொட்டார்கள் என்பதை உங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்து கொள்ளுங்கள்.
    “‘வறுமை நிலைக்குப் பயந்து விடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” எனும் பாடல் வரிகளை
மறந்துவிடாதீர்கள்.  வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல், உங்களை நீங்களே குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளாமல் முயன்று படியுங்கள். மாணவர்களாகிய நீங்கள் மனம் வைத்தால், எந்த அருவினையையும் ஆற்றமுடியும்”
என்று குறிப்பிட்டார்.
    அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன் மாணவர்களின்  நினைவாற்றலுக்கான  பயிற்சிகளை வழங்கினார்.
பள்ளித் தமிழாசிரியர் சுமதி, தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன், பொருளாளர் எ.தேவா, கவிஞர் பு.குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர்கள் அந்தோணிசாமி, தனசேகரன், சுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
    முன்னதாக, எசு.ஆர்.எம். இன்போடெக் கணினி பயிற்சி மையத்தின் சார்பில், பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
– வந்தையன்பன்

Sulaxan commences hunger-strike with two other political prisoners in Anuradhapura

Sulaxan commences hunger-strike with two other political prisoners in Anuradhapura

[TamilNet, Sunday, 20 August 2017, 18:13 GMT]
Three Tamil political prisoners, including an Up-Country Tamil, have commenced a continuous hunger-strike at Anuradhapura prison on Sunday objecting the attempts by the SL Attorney General’s Department to transfer their cases away from the High Court in Vavuniyaa to other courts in the South. The SL State, refusing to recognize the Tamil prisoners as political prisoners, wants to process their cases under the so-called Terrorism laws without proper evidences. 30-year-old Sulaxan Mathiyarasan, who has been imprisoned since 18 May 2009 went on a hunger-strike last year and concluded his protest after a promise was extended by D.M. Swaminathan, the SL ‘Resettlement’, ‘Prison Reform’ and Hindu affairs minister, that his case would be expedited without further delay. After witnessing further deceptions, Sulaxan decided earlier this month to launch a fresh hunger-strike.

Two other inmates, implicated together with him in the same case, have also joined him in the continuous hunger strike.

Sulaxan hails from Kara’navaay North in Vadamaraadchi, Jaffna. His father, Azhvaappillay Mathiyarasan, who was an elected civic member in the local council, passed away in 2015 after suffering from illness amidst his attempt to get his son released.

Two weeks ago, Mrs Mahendran, the mother of Sulaxan met Northern Provincial Chief Minister Justice C.V. Wigneswaran conveying her son's decision to commence hunger-strike. The mother was pleading with NPC Chief Minister to impress upon the SL President Maithiripala Sirisena to release her son or let a court in North to process the case.

The other two prisoners accompanying Sulaxan are Rasathurai Thiruvarul from 6th Division, Vela’nai West, Jaffna and Ganeshan Tharshan from Navalap-piddi, Kandy.

Following the last round of hunger-strike and the promises extended by SL Minister D.M. Swaminathan, a fresh case was filed against Sulaxan at Vavuniyaa High Court, in which the so-called ‘Terrorist Investigation Division’ deployed confessions obtained from other inmates under coercion or torture. The new confessions have been allegedly obtained from inmates who were arrested several years later.

Knowing that the judges who are aware the nature of cases would find it difficult to proceed with confessions lacking credibility, the SL TID was arguing in January 2017 that the cases where ex-LTTE members’ statements were being used, should be moved to courts in the South for ‘security’ reasons.

The SL State has consistently refused to recognize the imprisoned activists who were involved in the armed national liberation struggle of Tamil Eelam as political prisoners. Whilst the former JVP members, who engaged in an armed resistance in the South were recognized as political prisoners in the past, the genocidal State of Sri Lanka has continuously refused to accord that recognition to the Tamil prisoners.

Chronology:

5th International Conference on New Frontiers of Engineering, Science, Management and Humanities (ICNFESMH-2017)





5th International Conference on New Frontiers of Engineering, Science, Management and Humanities (ICNFESMH-2017)
Venue: Institution of Electronics and Telecommunication Engineers (IETE),Janakpuri, New Delhi, India
Date of Conference: 17  September 2017
 
 
 

Aim and scope
This conference provides an international forum for researchers, developers and academician who are involved in real time projects and research that provide solutions to exchange their valuable ideas and showcase the ongoing works which may lead to path breaking foundation of the futuristic engineering. The aim of this conference is to bring together the academicians, scientists, engineers and manufacturers from various institutions, universities, colleges and industry to discuss the relevance of various futuristic technologies emerging in this area throughout the world.Papers are invited from all fields of Engineering, Science and Management

Mail your paper at : sub@conferenceinfo.org
Last Date of Paper submission: 8  september 201
7
 
 
Highlights
  • Accepted Paper  in  UGC listed Jounals
  • Conference proceedings in e-book with ISBN
  • Presentation & Publication certificates.
  • Presentation at IETE
  • Presentation through skype.
  • If you are not able to come at IETE, mail 10 slides of paper.
  • Papers in absentia are welcome will be published
 
You are requested to communicate among your scholars and students
Thanks & Regards
Program Chair
Conferenceinfo
M;09873275385
wapp 9873309345
 

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாகச் சிறையில் முருகன் உணவு மறுப்பு!





உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாக

சிறையில் முருகன்  உணவு மறுப்பு!

 இராசீவு காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முறையின்றித் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முருகன். இவரைச் சந்திக்க உறவினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய  பேச்சுக்குப் பிறகும் சிறை விதிகளை மீறி முருகன்  உணவுமறுப்பு மேற்கொள்வதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்கின்றனர். ஏற்கெனவே தடைவிதித்துள்ளதால் போராடுபவரை அதற்காகத்தான் சந்திப்பு மறுக்கப்படுவதாகப் பரிவின்றிக் கூறுகின்றனரே!
 உயிர்ச்சமாதி அடைவதற்காக கடந்த 18.08. இல் தனது உண்ணா நோன்பை முருகன் தொடங்கினார். சிறையில் 3- ஆவது நாளாக உண்ணா நோன்பு  இருக்கும் முருகன் அறைக்குத் தனிக் காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  மேலும் முருகன் தொடர்ந்து உண்ணா நோன்பில் ஈடுபட்டால் சிறைத்துறைச் சலுகைகள் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 உயிரையே பொருட்படுததாதவர் இதற்கா கவலைப்படுவார்? மாறாக மனிதநேயத்துடன் நடந்துகொண்டு காப்பு விடுப்பில் விடுவித்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். வேண்டிய உதவிகள் புரிய வேண்டும். மனித நேயத்தைத் தொலத்த அரசிடம் இனியாவது மனித நேயத்தை எதிர்பார்க்கலாமா?